copyprotect

Friday, October 7, 2016

தமிழ்நாட்டின் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் ஜாதகம் என்ன சொல்கிறது ? (Tamilnadu chief minister Jayalalitha health status through Astrology)


முதலமைச்சர் ஜெயலலிதா மிதுன லக்கினம் , சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்கு தற்போது குரு தசை சனி புத்தி நடைபெற்று வருகிறது.






























தசா புத்தி 

1. மிதுன லக்கினத்துக்கு கடும் பகைவரான குரு பாதகாதிபதியாகி , பாதக ஸ்தானத்தில் வலிமையாக இருந்து தசை நடத்துகிறது.
2. நடக்கும் சனி புத்தியில், 8ம் அதிபதியான சனி மாரக ஸ்தானமான 2ம் பாவத்தில்
3. தசா நாதன் குரு இன்னொரு மாரக ஸ்தானமான 7ம் பாவத்தில்


















கோச்சாரம் 

சந்திரன் சூரியனின் நேரடி பார்வையில் பௌர்ணமி யோகத்திலும் ,
குருவின் 9ம் பார்வையில் குரு சந்திர யோகத்தால் மிகவும் வலிமை அடைந்திருப்பதால் , கோச்சார கிரக சுழற்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது கோச்சாரப்படி பார்த்தாலும்

1. குரு பார்வை இல்லாத அர்த்தாஷ்டம சனி
2. புரட்டாசி முடிந்து ஐப்பசியில் ராசி அதிபதி சூரியன் நீச்சம் அடைவதும்,  கார்த்திகையில் சனியுடனும் சேர்நதும் வலிமை இழக்கிறார்
3. ராசிக்கு 2, 8 குடைய புதன் , குரு மாரக ஸ்தானமான 2ம் இடத்தில


இந்த காரணங்களினால் அவர் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு
செயற்கை சுவாசம் பொறுத்த பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் !








































தசா புத்தியும், கோச்சாரம் இரண்டுமே சரி இல்லை ! 2017 ஏப்ரல் மாதம் வரை சனி புத்தியும் , பிப்ரவரி வரை குரு பார்வை இல்லாத அர்த்தாஷ்டம சனியும் தொடர்வதால் அபாயமான கட்டத்தை இன்னும் அவர் தாண்ட வில்லை என்பதை அவரது கட்டம் சொல்கிறது ! 




தமிழ்நாட்டின் ஜாதகம்

















தமிழ்நாடு , குறிப்பாக சென்னை மாகாணம் மேஷ ராசி என்று ஞானிகளால் அடையாளம் காட்டப்படுகின்றது ! அந்த வகையில் பார்த்தால் மேஷ ராசிக்கு அஷ்டம சனியும் , குரு பெயர்ச்சி 6ம் இடத்தில ருண , ரோக, சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார் !

இதனால் தலைமை செயலகம் அமைந்துள்ள சென்னை ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை சந்திக்க வேண்டும். ஸ்திர தன்மை இல்லாத நிர்வாகம் , பொருளாதார சரிவு ஏற்பட வேண்டும் என்பது விதி. நிர்வாகம் மீண்டும் சீர் ஆவதற்கு அஷ்டம சனி முடிந்து அடுத்த குரு பெயர்ச்சி வரை பொறுத்து இருக்க வேண்டும் என்று எடுத்து காட்டுகிறது !


எது எப்படி இருந்தாலும் , கண்ணதாசன் எழுதிய வரிகளை போல , முடிவு என்பது நம்மை படைத்த பரம்பொருளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் !  பொறுத்திருந்து பிரார்த்திப்போம் !


எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது



குறிப்பு - பணத்துக்காக ஜோதிடம் பார்க்கும் ஜோதிடன் நான் இல்லை. அதனால், எதையும் கூட்டியோ குறைத்தோ சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உள்ளதை உள்ளபடி எழுதி இருக்கிறேன்.
யார் மனதெனும் புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்.


Monday, September 5, 2016

கற்பக விநாயகர் - கண்ணதாசனின் அனுபவம் !!




அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை!

 பிள்ளையார் பட்டி என்னும்
பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
உருவத்தின் இயற்கைத் தோன்றல்
 தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்
 திருவருள் வழங்கும் தெய்வம்
 கள்ளமில் பக்தர் தந்தை
 கற்பக மூர்த்தி போற்றி!



- கவியரசர் கண்ணதாசன்



பிள்ளையார்பட்டியில் மட்டுமே நடக்கும் சூர சம்ஹாரம் வீடியோ கீழே !





-----------------------------------------------------------------------------------------------------------------------

Note : இரண்டு மாதமாக உடல் நிலை சரி இல்லாததால் தொடர்ந்து எழுத முடியவில்லை ! இப்பொழுது சற்று தேறி வருகிறேன் ! நேரம் கிடைக்கும் போது எல்லாம் பதிவிடுகிறேன் !!

-----------------------------------------------------------------------------------------------------------------------

விநாயகர் அகவல்





சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
சரணே! சரணே!


-- ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு)⁠⁠⁠⁠





Thursday, August 11, 2016

சர , ஸ்திர , உபய ராசிகள்

ராசிகளை சர , ஸ்திர , உபய ராசிகளாக பிரிக்கலாம்

சர ராசி - மேஷம் , கடகம் , துலாம் , மகரம்
ஸ்திர ராசி - ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம்
உபய ராசி - மிதுனம், கன்னி , தனுசு , மீனம்


இப்பொழுது இந்த வகை ராசிகளுடைய குண நலன்களை பார்க்கலாம்.

சர ராசி - தலைமை பண்பு , வேகம் , வளைந்து கொடுத்தல், சுதந்திர எண்ணம் , இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ளுதல் , மற்றவர்களிடம் எளிதாக காரியம் சாதித்து கொள்ளுதல், இலக்கு மட்டுமே குறி , மன்னிக்கும் குணம்


ஸ்திர ராசி - ஸ்திர தன்மை , பிடிவாதம் , தலைக்கனம் , வேகம் இல்லா விவேகம் , அமைதி , இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ள முடியாமல் தவித்தல், கருத்துக்களை மாற்றி கொள்ளாத நிலை , கடும் கோபம் , எதிரிகளை மன்னிக்காத குணம், கசப்பான சம்பவங்களை மறக்க முடியாத நிலை, வளைந்து கொடுத்த போக தெரியாத நிலை


உபய ராசி - சாந்தம் , அமைதி , கூச்சம் , திறந்த மனது , படித்து கொண்டே இருத்தல் , ஆராய்ச்சி எண்ணம் , பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தல் , ஆன்மீக ஈடுபாடு , தத்துவ நிலை , பொன் பொருள் நாட்டமின்மை, மன்னிக்கும் குணம் , மறதி, இருவித எண்ணங்கள் , தடுமாற்றம்



இது தவிர , பொதுவாக , சர ராசிகள் அரசியலுக்கு ஏற்ற ராசிகள் என்றும் , ஸ்திர ராசிகள் கலைத்துறைக்கு ஏற்ற ராசிகளாகவும், உபய ராசி ஆராய்ச்சி படிப்பு , வேலைக்கு ஏற்ற ராசிகளாகவும் கூறப்படுவது உண்டு!



ஆண் ராசி / பெண் ராசி

ஆண் ராசிகள் -
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு, கும்பம்

ஆண் ராசிகளின் இயல்பு -
வெளிப்படை தன்மை , எதிரிகளை அழிக்கும் எண்ணம்,  ஆதிக்கம் செலுத்துதல் , சகஜமான பேச்சு ஆகிய சிலவற்றை கூறலாம்.


பெண் ராசிகள் -
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் , மீனம்

பெண் ராசிகளின் இயல்பு -
அமைதி , பராமரித்தல் , பாதுகாத்தல் , மனதில் உள்ளதை வெளிப்படுத்தாத இயல்பு , உணர்ச்சிவயப்படுத்தல் ஆகிய சிலவற்றை கூறலாம்.


பொதுவான குண நலன்களை தவிர , கிரகங்கள் ஆண் , பெண் ராசிகளில் இருப்பதை வைத்து , பிறக்க போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்பதை ஜோதிடர்கள் உபயோகிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று !


நட்பு கிரகங்கள்


கிரகங்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. சூரியன் , சந்திரன் , குரு , செவ்வாய் ஒருவருக்கு ஒருவர் நட்பு கிரகங்கள். கேது செவ்வாயை போல் பலன் கொடுப்பவர் என்பதால் இந்த பிரிவில் சேர்க்கலாம் (தகவலுக்காக மட்டும்).

2. சுக்கிரன், சனி , புதன் ஒருவருக்கு ஒருவர் நட்பு கிரகங்கள். ராகு சனியை போல் பலன் கொடுப்பவர் என்பதால் இந்த பிரிவில் சேர்க்கலாம் (தகவலுக்காக மட்டும்).

சரி, இந்த கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பாக இருப்பதற்கு என்ன காரணம் ?

ஒருவருக்கு மற்றொருவர் கேந்திர , திரிகோண யோகாதிபதிகள் என்ற காரணம் இருந்தாலும், உண்மையான காரணம் , ஒரு பிரிவில் உள்ள ராசி அனைத்தும் நீர், நெருப்பு Combinationஇல் வரும் ராசிகள் ! மற்றொரு பிரிவு , மண் காற்று Combinationஇல்  வரும் ராசிகள் !

உதாரணத்திற்க்கு , செவ்வாயை எடுத்து கொண்டால் , மேஷ ராசி நெருப்பு ராசி, விருச்சிகம் நீர் ராசி. அதே போல , சுக்கிரனை எடுத்து கொண்டால் ரிஷபம் மண் , துலாம் காற்று ராசிகள்.


எந்த எந்த ராசிகள் என்ன வகையை சேர்ந்தது என்பதை கீழே கொடுத்து உள்ளேன் !

நெருப்பு - மேஷம் , சிம்மம் , தனுசு
மண் - ரிஷபம் , கன்னி , மகரம்
காற்று - மிதுனம் , துலாம் , கும்பம்
நீர் - கடகம் , விருச்சிகம் , மீனம்



நெருப்பு , மண், காற்று , நீர் ராசிகளை பற்றியும் , ஒவ்வொரு ராசியின் இயல்பு , குணநலன்களை பற்றியும் அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம் !!


Saturday, August 6, 2016

மக்களின் எதிர்பார்ப்பு !


பொதுவாக ஜோதிடர்கள் நமக்கு நல்ல பலனை மட்டுமே சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம் ! கொஞ்சம் Negative ஆக சொன்ன கூட , இந்த ஜோதிடர் சரி இல்லை , வேறு ஒருவரிடம் பார்க்கலாம் என்று சொல்லு வார்கள் ! ஜோதிடரின் இடத்தில் இருந்து பார்த்தால் , கத்தி மேல் நடப்பது மாதிரி தான் !!

உதாரணத்திற்கு , 6இல் சனி ராகு இருப்பதால் , எதிரிகளை எளிதாக வெல்ல முடியும் , எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று சொன்னால் , அதை தவறாக புரிந்து கொண்டு, வேலை பார்க்கும் இடத்தில மேலதிகாரர்களிடம் சண்டை போடுவது , ரோட்டில் போறவனிடம் வம்பு இழுப்பது என்று எதிரிகளை அவர்களே உருவாக்கி கொண்டால் அதற்கு ஜோதிடன் என்ன செய்ய முடியும் !

அதே போல , இன்னொரு உதாரணம். ராசிக்கோ , லக்கினத்துக்கோ 2, 7, 8 இல் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் பட்சத்தில் , தோஷம் இருக்கு, தாமத திருமணம் என்று சொன்னால் , உடனே வாழ்க்கையே முடிந்து விட்டது போல , கன்னத்தில் கை வைத்து கொண்டு உக்காந்து விடுவார்கள் !

நன்கு ஜோதிட ஞானம் பெற்றவர்கள், சில விடயங்களை , இலை மறை காயாக தான் சொல்வார்கள் , அதை ஜாதகர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் ! ஏன் என்றால் , ஒரு நல்ல ஜோதிடனுக்கு அழகு , ஜாதகனுக்கு தேவையான ஊக்கம் அளித்து, அவனை நல் வழிப்பாதையில் அழைத்து செல்ல வேண்டும் ! Demotivate செய்ய கூடாது !


தோஷம் உள்ள ஜாதகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்ன வென்றால் - முற் பிறவிகளில் நாம் செய்த பாவ மூட்டைகளை சுமந்து கொண்டு தான் இந்த பிறவி எடுத்து இருக்கிறோம். இது நாம் செய்த கர்மா,  அதை நாம் கழித்தே ஆக வேண்டும் ! தொடர் தோல்விகளையும் , அவமானங்களையும் , துயரங்களையும், தாங்கி கொள்ள முடியாமல் , வாழ்வை பாதியிலே முடித்து கொள்பவர்களும் உண்டு !! அவர்களை சொல்லி குற்றமில்லை , கிரகங்கள் ஆட்டி படைக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் , அந்த பாவமும் சேர்ந்து அடுத்த பிறவியில் இன்னும் கடுமையான சோதனைகளை கடக்க வேண்டியிருக்கும் ! நாம் வாங்கி வந்த வரம் அவ்வளவு தான் என்பதை ஏற்று கொண்டு , மனதை தேற்றி கொண்டு, இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு முன்னேறி செல்ல வேண்டும் !


12இல் கேது இருக்க பிறந்தவர்களுக்கு, அடுத்த பிறவி கிடையாது , பிறவி பெருங்கடல் நீந்தி வந்து விட்டார்கள் என்று சொல்வது உண்டு !
அது போல , உலகமே நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள் என்ற சொல்லும் உண்டு !


Life is a game and you will have to complete till the end. If you discontinue in the middle, then you will again have to start back from Level 1 !!


-----------------------------------------------------------------------------------------------------------------------


Good inspirational song from Kannadasan just struck in my mind -


வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே வாழலாம்

வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்





சித்தா கண்காட்சி

தேவையானவர்கள் உபயோகித்து கொள்ளவும் - அனுமதி இலவசம் !!




காத்திருக்கப் பழகு !!



பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேரும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

மரம் மரமாகும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

"இது உன்னுடைய வாழ்க்கை"

"ஓட்டப்பந்தயம் அல்ல"

ஒடாதே

நில்

விழி

பார்

தேடு

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததனாலேயே,

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் நிர்ப்பந்திக்கப்படுகிறது.

அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.

"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்

உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்"

காத்திருக்கப் பழகு....

வாழப்பழகுவாய் !!

Inspiration Quote 1

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....

Always think positive👍👍

குரு பெயர்ச்சி - நகைச்சுவைக்காக !!













Friday, August 5, 2016

கோச்சாரமா அல்லது தசை புத்தியா ?


கோச்சாரம் என்றால் பிறந்த நேரத்தில் சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக வைத்து, கிரகங்கள் இன்றைய நிலையில் எப்படி சுழல்கிறது என்பது வாகும்.

தசை புத்தி என்பது , பிறந்த நட்சத்திரை வைத்து 120 வருடங்களுக்கு எழுதப்பட்டு  விடும். உதாரணமாக சுக்கிரன் 20 வருடமும் , குரு 16 வருடமும் தசை நடத்துவார்கள்.


சரி , இப்பொழுது எது சரி ? எதை நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பது கேள்வி ! கோச்சாரத்தை கணக்கில் எடுத்து கொள்ள தேவை இல்லை என்று யாராவது கூறினால் அவர்களுக்கு ஒரே கேள்வி,  சந்திராஷ்டமத்தை கணக்கில் நீங்கள் எடுத்து கொண்டால் , குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சியையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் !

சந்திரன் கோச்சரத்தில் எட்டில் வரும் பொழுது மனம் தடுமாறுகிறது , புத்தி வேலை செய்ய மறுக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை ! சந்திரன் 2.5 நாட்களில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் , குரு , சனி வருட கிரஹங்கள். அது தான் வித்தியாசம்!

கோச்சார பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் , ராசிக்கு மறையாமல் , கேந்திர திரிகோணங்களில் கிரஹங்கள் பெயர்ச்சி ஆவதை பொருத்தும் , மறைவிடமான 6, 8, 12 இடங்கள்,  தன லாப ஸ்தனங்களான 2, 11 இடங்களை பொருத்தும் மாறுபடும் !



























Thursday, July 28, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மீனராசி / Pisces Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)


மெழுகுவத்தி தன்னை உருக்கி அடுத்தவர்களுக்கு வெளிச்சம் தருவது போல் , அடுத்தவர் நலனை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும்(Sacrifice) மீன ராசி நேயர்களே ! கால புருஷ தத்துவத்திற்கு 12 வது ராசி  மீன ராசி என்பதால் இந்த நிலை ! 12 ராசிகளிலேயே, அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத ராசி , ரெண்டே ராசி ! ஒன்று தனுசு, இன்னொன்று மீனம் ! இரண்டுக்குமே குரு பகவான் தான் அதிபதி !
மேலும் , ஒரு ஜாதகத்தில் இருக்கும் அனைத்து விதமான யோகங்களும் குருவையும் சந்திரனையும் மையமாக வைத்தே எழுத பட்டு உள்ளது ! ஆட்சி , உச்சம் பெற்ற வளர்பிறை சந்திரன் , சூரியனின் நேரடி பார்வையில்  (பௌர்ணமி), இருப்பது , குருவிற்கு நிகரான முழு சுப கிரகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன !  குரு பகவானை பொன்னவன், மன்னவன் , பிரகஸ்பதி என்று ஜோதிட நூல்கள் புகழ்வதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது புரிந்து இருக்குமே !


உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் , இது நாள் வரை உடல் நிலையில் தாங்க முடியாத துயரத்தை கொடுத்த குரு ,  இப்பொழுது ஏழாமிடத்திற்கு வருவது மிகவும் சிறப்பான கால கட்டம் ! நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இப்பொழுது கண்டிப்பாக திருமணம் நடை பெரும் ! எல்லா வகையிலும் உயர்வான நிலையை நீங்கள் எதிர்பார்க்கலாம் !

குரு உங்கள் ராசிக்கு 11, 1, 3 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , லாபம் , மன தெளிவு , தோற்ற பொலிவு , இளைய சகோதரம் , குழந்தை பாக்கியம் , திருமணம் , வெளிநாடு வாய்ப்பு , கல்வி , வேலை வாய்ப்பு , பதவி உயர்வு , நல்ல இட மாற்றம் , போன்ற அனைத்து விதமான நற்பலன்களும் எதிர் பார்க்கலாம் ! தசை புத்தி நன்றாக இருந்தால் , துணிந்து பல முயற்சிகளை எடுத்து வெற்றி பெறலாம் !


ஆலங்குடி , திட்டை போன்ற திருத்தலங்கள் சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !  குல தெய்வ கோவிலுக்கு வருடத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள் ! கோவில் மேம்பாட்டுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் !














குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - கும்ப ராசி / Aquarius Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)


நல்ல இதயம் , வேலை சூட்சமம் , பிறருக்கு கெடுதல் நினைக்காத உள்ளம் , பேச்சு திறன் ஆகிய குணங்கள் கும்ப ராசி அன்பர்களுக்கு பொருந்தும் !

சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் , 2,  11 க்கு அதிபதியான குரு பகவான் , எட்டமிடான அஷ்டம குருவாக மாறுவது அவ்வளவு சிறப்பான நேரம் கிடையாது ! பண தட்டுப்பாடு ஏற்படும் , செய்யும் தொழில் , வேலையில் கவனம் தேவை ! சுப காரியங்கள் செய்ய / நடக்க  தடை உண்டு !

குரு உங்கள் ராசிக்கு 12, 2, 4 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , ஓரளவு நற்பலன்கள் எதிர்பார்க்கலாம் ! பொதுவாக , அலைச்சல் , உடல் நலம் கெடுதல் , நிம்மதி குறைவு , தோல்விகள் , அவமானங்கள் நீங்கள் சந்திக்கலாம் ! குரு , சனி , ராகு , கேது பெயர்ச்சிக்கு எதுவுமே சரியில்லை என்பதால் கவனம் தேவை !


ஒரு வருடம் மட்டும் நீங்கள் பொறுத்து கொண்டால் , அடுத்து வரும் குரு பெயர்ச்சியும், சனி பெயர்ச்சியும் உங்களை புகழ் , செல்வாக்கின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் (ஜாதக வலிமையை பொறுத்து மாறுபடும் ). வாழ்த்துக்கள் !!


ஆலங்குடி , திட்டை போன்ற திருத்தலங்கள் சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு ! முடியாதவர்கள் , வியாழன் விரதம் , அருகில் உள்ள கோவிலுக்கு செல்லுதல் , வீட்டிலேயே தினமும் வழிபடுவதால் சிறிது ஆறுதல் அடையலாம் ! குல தெய்வ கோவிலுக்கு வருடத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள் ! கோவில் மேம்பாட்டுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் !














குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மகர ராசி / Capricorn Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)


புத்திசாலித்தனம் , எதையும் எளிதாக கிரகித்து கொள்ளுதல், தலைமை பண்பு , தலைக்கனம் , சிறிது கஞ்சத்தனம் , Practical Mind, Organized, அதீதமான கலை ஆர்வம் , நோயாளி போல காட்சி தருதல், பேச்சு திறன் , செயல் திறன் , வழக்காடுதலில் வெற்றி, மெல்லிய உடல்  ஆகியவை மகர ராசி அன்பர்களுக்கு பொருந்தும் !!

சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் , 3,  12 க்கு அதிபதியான குரு பகவான் , ஒன்பதாமிடம் மாறுவது மிகவும் சிறப்பான காலகட்டம் ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஒரு பழமொழி ! எல்லா விதமான சுப காரியங்களும் தங்கு தடையின்றி நடக்கும் காலம் இது ! ராசி அதிபதி சனியும் 11 ம் வீட்டில் இருப்பதால் , மகிழ்ச்சி, திருப்தி , சந்தோடம் , சந்தான பாக்கியம் , திருமணம் , கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் , வழக்கு , போன்ற எல்லா காரியங்களும் வெற்றியாக கூடிய கால கட்டம் !! தசை புத்தியும் சிறப்பாக இருந்தால் , மிக பெரிய செல்வாக்கு பெற்று , மிக உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் !


குரு உங்கள் ராசியையும் , 3, 5 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , மேலும் சனியும் நல்ல நிலையில் இருப்பதால் , இதை போன்ற ஒரு சிறப்பான ஆண்டு மீண்டும் உங்களுக்கு கிடைக்க போவது இல்லை! மொத்த வாழ்நாளில் இந்த ஆண்டு சில பேருக்கு மட்டும் மறக்க முடியாத ஆண்டாக அமையும் !

அடுத்தது 7.5 சனி ஆரம்பிக்க உள்ளதால் , இந்த பொன்னான காலத்தை உபயோகித்து கொள்ளுமாறு உங்களுக்கு ஆலோசனை வழங்க படுகிறது !!










குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - தனுசு ராசி / Sagittarius sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)


மற்றவர்களுக்கு தீங்கு இளைக்காத நல்ல உள்ளம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ! நெருப்பு ராசியாக இருந்தாலும் , அமைதி , சாந்தம் , நல்ல எண்ணம் , ஆன்மீக ஈடுபாடு நிச்சயம் உங்களிடம் உண்டு ! காலா புருஷ தத்துவத்துக்கு 9வது ராசி என்பதால் , தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி தர வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கும் ! வெள்ளை உள்ளம் கொண்டவர் என்பதால் , மற்றவர்கள் எளிதாக இவர்களை ஏமாற்றி விடுவர் ! விழிப்போடு இருப்பது நல்லது !


ராசி அதிபதியும் , 4ம் இடத்துக்கு அதிபதியான குரு பகவான் , பத்தாமிடம் மாறுவது சிறப்பாகாது ! வேலை , தொழிலில் கவனம் தேவை ! இருந்தாலும் , ராசி அதிபதி என்பதால் பெரிய கெடுதல் ஏற்பட வாய்ப்பு இல்லை ! ஆனால் , அந்த கெடுதல் சனியின் வழியே வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது ! இத்தனைக்கும் , சனி க்கு குரு பார்வை இல்லை ! பொருள் விரயம் கடுமையானதாக கடந்த 2 வருடங்கள் இருந்திருக்கும் ! எதுவும் சேமித்து இருக்க முடியாது !


குரு உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய ராசிகளை பார்ப்பதால் ஓரளவு நன்மை மட்டுமே எதிர்பார்க்கலாம் ! தசை, புத்தி சிறப்பாக இல்லையென்றால் ,
ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !








குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - விருச்சிகம் ராசி / Scorpio Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)


குழப்பம் , எரிச்சல் , நேர்மை , பிடிவாதம் , கொந்தளிப்பான மன நிலை ,
ஆளுமை , சரியான நேரத்தில் கொடுத்த வேலையே முடித்தல் , வாக்கு பலிதம் , பழி வாங்கும் எண்ணம் , கடும் கோபம், மற்றவர்களை புரிந்து  கொள்ளாமல் எளிதாக புண்படுத்துவது காயப்படுத்துவது, தன்னை தானே காயப்படுத்தி கொள்வது , ஆகிய குணங்களை உடைய விருச்சிக ராசி நேயர்களே ! ஞானிகளால் உங்களுக்கு கொடுக்க பட்டு இருக்கும் சின்னம் தேள் ஏ இதற்க்கு சாட்சி !


சனி விருச்சிக ராசியில் இருப்பதால் , இப்பொழுது விருச்சிக ராசியில் பிறக்கும் குழந்தைகளுக்கு , சனி சந்திரன் இருவரும் சேர்ந்து இருப்பார்கள் ! அப்படி இருக்கையில் , மேலே நான் சொன்ன குணங்கள் , 100% ஒத்து போகும் !


ஜென்ம சனியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் உங்களுக்கு , இந்த குரு பெயர்ச்சி நிச்சயம் ஆறுதல் அளிக்க கூடியது !


செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற ராசியாகி, குரு பகவான்   2, 5 க்கு அதிபதியாகி , இப்பொழுது பதினொன்றில் வருகிறர் ! இதுநாள் வரை தடை பட்டு இருந்த குழந்தை பாக்கியம் , திருமணம் போன்ற சுப காரியங்கள் நிச்சயம் நடக்கும் !  கல்வி , தொழில் , வேலை , எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பதை நீங்கள் 100% நம்பலாம் ! அதே நேரத்தில் , ஜென்ம சனியும் , கூடிய சீக்கிரமே விலக போவதால் , இனி குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும் !


குரு உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய ராசிகளை பார்ப்பதால் இளைய சகோதரம் , பிள்ளைகள் , கணவன் / மனைவி வழியில் நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம் ! வெளிநாடு யோகம் சில பேருக்கு கிடைக்கும் ! தசை, புத்தி சிறப்பாக இல்லையென்றால் , ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !


உங்களை பொறுத்தவரை , கோயிலுக்கு போவதை விட , த்யானம், யோகா , போன்ற  மனதை அமைதியாக , ஒரு நிலை படுத்துவதே சிறந்த பரிகாரம் ! மௌன விரதம் நிச்சயம் உதவி செய்யும்!