copyprotect

Thursday, July 28, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மீனராசி / Pisces Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)


மெழுகுவத்தி தன்னை உருக்கி அடுத்தவர்களுக்கு வெளிச்சம் தருவது போல் , அடுத்தவர் நலனை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும்(Sacrifice) மீன ராசி நேயர்களே ! கால புருஷ தத்துவத்திற்கு 12 வது ராசி  மீன ராசி என்பதால் இந்த நிலை ! 12 ராசிகளிலேயே, அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத ராசி , ரெண்டே ராசி ! ஒன்று தனுசு, இன்னொன்று மீனம் ! இரண்டுக்குமே குரு பகவான் தான் அதிபதி !
மேலும் , ஒரு ஜாதகத்தில் இருக்கும் அனைத்து விதமான யோகங்களும் குருவையும் சந்திரனையும் மையமாக வைத்தே எழுத பட்டு உள்ளது ! ஆட்சி , உச்சம் பெற்ற வளர்பிறை சந்திரன் , சூரியனின் நேரடி பார்வையில்  (பௌர்ணமி), இருப்பது , குருவிற்கு நிகரான முழு சுப கிரகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன !  குரு பகவானை பொன்னவன், மன்னவன் , பிரகஸ்பதி என்று ஜோதிட நூல்கள் புகழ்வதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது புரிந்து இருக்குமே !


உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் , இது நாள் வரை உடல் நிலையில் தாங்க முடியாத துயரத்தை கொடுத்த குரு ,  இப்பொழுது ஏழாமிடத்திற்கு வருவது மிகவும் சிறப்பான கால கட்டம் ! நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இப்பொழுது கண்டிப்பாக திருமணம் நடை பெரும் ! எல்லா வகையிலும் உயர்வான நிலையை நீங்கள் எதிர்பார்க்கலாம் !

குரு உங்கள் ராசிக்கு 11, 1, 3 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , லாபம் , மன தெளிவு , தோற்ற பொலிவு , இளைய சகோதரம் , குழந்தை பாக்கியம் , திருமணம் , வெளிநாடு வாய்ப்பு , கல்வி , வேலை வாய்ப்பு , பதவி உயர்வு , நல்ல இட மாற்றம் , போன்ற அனைத்து விதமான நற்பலன்களும் எதிர் பார்க்கலாம் ! தசை புத்தி நன்றாக இருந்தால் , துணிந்து பல முயற்சிகளை எடுத்து வெற்றி பெறலாம் !


ஆலங்குடி , திட்டை போன்ற திருத்தலங்கள் சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !  குல தெய்வ கோவிலுக்கு வருடத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள் ! கோவில் மேம்பாட்டுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் !














5 comments:

  1. Sir, romba arumai ! thanks ! meena rasi, uthirattathi natchathiram , mithuna lagnam ! Kethu dasai romba kastama irukku sir, adutha dasai eppadi irukkumnu sollunga ?? Thank you !

    ReplyDelete
  2. அடுத்த தசை மிதுன லக்கினத்துக்கு யோகாதிபதியான சுக்கிரனின் தசை. சுக்கிரன் எங்கு அமர்ந்து இருக்கிறார் என்று நீங்கள் சொல்ல வில்லை. எப்படி இருந்தாலும் நன்றாகவே இருக்கும் !

    ReplyDelete
  3. Hello sir.. very good post on guru peyarchi.. my son is of meena rasi/mithuna Laguna/uttrattathi.. born on 11-feb-2016 3:14pm in Saturn Dasha. Is it bad time for him sir ?.. i was told also he has guru chandala yog (3house with ragu) and buddha-aditya yog(8house).. I am worried for his health .. kindly reply sir...

    ReplyDelete
  4. Also here is the house information sir... Requesting you kindly to reply if his life will be good sir..
    1,2-nil, 3-guru+ragu, 4-nil, 5-sevvai,6-sani,7-sukkran,8-suryan + Buddhan, 9-ketu,10-chandran, 11,12-nil.. pls

    ReplyDelete
    Replies
    1. மிதுன லக்கினம் , மீன ராசி , உத்திரட்டாதி நட்சத்திரம். லக்கினாதிபதி புதன் வர்கோத்தமம் பெற்று , ஆயுள்காரகனான சனி நவாம்சத்தில் ஆட்சி பெற்று , மேலும் 8க்கு அதிபதியான சனி தன் வீட்டையே பார்ப்பதால் 100% தீர்க்க ஆயுள் ! பயப்பட தேவை இல்லை ! என்னதான் சனி 8, 9 க்கு அதிபதி ஆகி புதனுக்கு நண்பராக இருந்தாலும் , இயற்கை பாவ கிரகம் என்பதால் உடல் சம்பத்தப்பட்ட பிரச்சனை இருக்க தான் செய்யும் ! சனி தசை முழுக்க சளி தொந்தரவு போன்ற சிறு சிறு பிரச்சனைகள் இருக்க தான் செய்யும் !

      6இல் இருக்கும் சனி 3அம் இடத்தை பார்ப்பதால் 30 வயதுக்கு மேல் , BP, Cholestrol போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது ! சிறு வயதில் இருந்தே சரியான உணவு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை !

      லக்கினாதிபதி புதனும் , மிதுன லக்கினத்துக்கு முதல் தர யோகாதிபதியான சுக்கிரனும் 3 degreeக்குள் இணைந்து இருப்பது சிறந்த யோகம்! புதன் தசை நன்றாக இருக்கும் !

      செவ்வாயின் நிலை மட்டும் சரி இல்லை என்பதால் அதற்கேற்ற பரிகாரம் செய்து கொள்ளவும் !

      Delete