copyprotect

Thursday, July 28, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - ரிஷப ராசி / Taurus sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)


அழகான தோற்றமும் , பிடிவாதமும் , சிறிது தலைக்கனமும், மனம் கலங்காமல் தொடர்ந்து போராடும் குணமும் ,  பொறாமை குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே ! இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மிக சிறப்பான பெயர்ச்சி !

குரு ராசிக்கு 9, 11, மற்றும் ராசியை பார்க்கிறார் ! கீழ் கண்ட நன்மைகளை எதிர்பார்க்கலாம் -

குழந்தை பாக்கியம்
திருமணம்
பூர்வ புண்ணிய பலன்கள்
தர்ம காரியங்கள் செய்தல்
பெரியவர்கள் , அப்பாவிடமிருந்து ஆதாயம்
அப்பாவின் உடல்நிலை முன்னேற்றம்
தனலாபம்
வழக்கில் இருந்து விடுதலை
புகழ்
பிரபலங்களுடன் தொடர்பு
மன தெளிவு
நற்காரியங்கள் செய்தல்
படிப்பில் நல்ல முன்னேற்றம்
வெளிநாடு வாய்ப்பு
உடல்நிலை முன்னேற்றம்
தோற்ற பொலிவு
சுப நிகழ்ச்சி
செல்வாக்கு உயர்வு
பதவி உயர்வு
நல்ல இட மாற்றம் , வேலை மாற்றம்
பூர்வ சொத்துக்கள்


குரு உங்கள் ராசிக்கு 8, 11 க்கு அதிபதி என்பதால் வக்கிரம் , அதிசாரம் ஆகிய காலங்களில் நல்ல பலன்கள் தடைபடும் ! நல்ல தசா , புத்தி நடைபெற்றால் பலன்கள் ரெட்டிப்பாகும் !!


ஆலங்குடி , திட்டை சென்று வருவது நல்ல பரிகாரம் !  அடுத்து வருவது அஷ்டம சனி என்பதால் இந்த அருமையான கால கட்டத்தை கவனமாக உபயோகித்து கொள்ள உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது !!







5 comments:

  1. Thank you sir... encouraging post..

    ReplyDelete
  2. Sir my dob is 14-03-89 13:10 Coimbatore how will my career in future will I get govt job

    ReplyDelete
    Replies
    1. மிதுன லக்கினம் , ரிஷப ராசி , மிரகசிரீஷ நட்சத்திரம். பத்தில் திக் பலம் பெற்ற சூரியன் இருப்பதால் அரசாங்க வேலைக்கான வாய்ப்புக்கள் அதிகம் ! இன்றில் இருந்து டிசம்பர் வரையிலும் உங்களுக்கு நல்ல நேரம் ! தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் !

      லக்கினாதிபதி புதன் , ராகுவுடன் 1 டிகிரி யில் இணைந்தது குறை தான். புதன் புத்தி நடப்பதாலும் , லக்கினாதிபதி என்பதாலும் , புதனை வலுப்படுத்துவது அவசியம் ஆகிறது !

      புதன் கிழமையோ அல்லது ஜென்ம நட்சத்திரமான மிரகசிரீஷம் அன்றோ , திருவெண்காடு சென்று , புதன் ஹோரையில் , வீட்டில் சமைத்த பச்சை பயிறு , மூலவர் சன்னிதானத்திலும், புதன் சன்னிதானத்தில், வைத்து வணங்கி விட்டு, பக்தர்களுக்கு , அதை பரிமாறுங்கள் ! வலது கையில் மரகத கல் அணிவது சிறப்பு !

      Delete
  3. Thanku for the predictions. One more question. I am facing lot of health related issues like surgery, thyroid, back pain etc for past 3 years. will it improve in the future?

    ReplyDelete
    Replies
    1. You born in ashtama sani which means saturn is coming to the same rasi when you were born. You will start feeling the heat of ashtama sani from next year. Better to do frequent doctor checkups, follow healthy lifestyle. For time being until Jan 2017, planets are favorable

      Delete