copyprotect
Thursday, July 28, 2016
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுன ராசி / Gemini sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
இனிமையாக , எளிமையாக , அனைவருடனும் பழகும் மிதுன ராசி நேயர்களே , அதன் மூலமாக , நிறைய நண்பர்களையும், உறவினர்களுக்கு இடையில் நல்ல பாலமாகவும் விளங்குகிறீர்கள் !!
இது நாள் வரை உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான குரு 3இல் இருந்து பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தார் ! இம்முறை 4ஆம் இடத்தில சற்றே குறைவான கெடு பலன்களையே எதிர்பார்க்கலாம் !
குரு உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய ராசிகளை பார்க்கிறார் ! உடல் நிலை மேம்படும் , தொழில் நன்றாக இருக்கும் , தூக்கம் நன்றாக வரும், செலவு குறையும் , வழக்கில் இருந்து விடுபடலாம் , கணவன் அல்லது மனைவி மூலம் சுகம் , சொத்து சேர்க்கை எதிர்பார்க்கலாம் ! எப்படி இருந்தாலும் மனதின் ஓரத்தில் எதோ ஒரு கவலை உங்களை துரத்தி கொண்டே இருக்கும் ! விரக்தி ஏற்படுவது இயல்பு தான் ! இந்த குரு பெயர்ச்சி 50-50 பலன்களை மட்டுமே நீங்கள் எதிர் பார்க்கலாம் !!
சுப நிகழ்ச்சிக்கு எந்த தடையும் இல்லை என்றாலும் , அடுத்த குரு பெயர்ச்சியில் செய்வது சிறப்பு !
குரு உங்கள் ராசிக்கு 7, 10 க்கு அதிபதி என்பதால் வக்கிரம் , அதிசாரம் ஆகிய காலங்களில் நல்ல பலன்கள் தடைபடும் ! தசா , புத்தி சாதகமாக இல்லை என்றால் கெடு பலன்கள் ரெட்டிபாக்கலாம் !! கவனம் !
ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வேண்டுவது நல்ல பரிகாரம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment