copyprotect
Thursday, July 28, 2016
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - சிம்ம ராசி / Leo Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
போர்குணம் , வீரம், தலைக்கனம் , யாரையும் மதிக்காத குணம் , பிடிவாதம் , பிள்ளைகள் மீது பாசம் , நேர்மை ஆகிய குணங்களை உடைய சிம்ம ராசி நேயர்களே ! ஜென்ம குரு , அர்த்தாஷ்டம சனி , ஆகியவற்றால் பல்வேறு அடி வாங்கி , நல்ல காலத்துக்காக ஏங்கி காத்து இருக்கும் உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பெயர்ச்சி !
ராசிக்கு 5, 8 க்கு அதிபதியாகி , தனகாரகன் குரு தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில வருவது நிச்சயம் அபரிதமான பொருள் சேர்க்கை , குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும்! குழந்தை பாக்கியம் , திருமணம் , பதவி உயர்வு , பல்வேறு வழிகளில் பணம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம் !! ஜாதகத்தில் தசை புத்தி நன்றாக இருந்தால் , துணிந்து பல்வேறு தொழில்களை செய்து பொருள் ஈட்டலாம் ! அர்த்தாஷ்டம சனியும் கூடிய சீக்கிரம் விலக போவதால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் !
குரு உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய ராசிகளை பார்ப்பதால் ஆயுள், உடல் நலம் , தொழில் , வேலை நன்றாக இருக்கும் ! நீண்ட காலமாக திருமணம் தடை இருந்தவர்களுக்கு 95% நிச்சயம் திருமணம் நடக்கும் !
ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வேண்டுவது நல்ல பரிகாரம் நல்லது !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment