copyprotect

Thursday, July 28, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மகர ராசி / Capricorn Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)


புத்திசாலித்தனம் , எதையும் எளிதாக கிரகித்து கொள்ளுதல், தலைமை பண்பு , தலைக்கனம் , சிறிது கஞ்சத்தனம் , Practical Mind, Organized, அதீதமான கலை ஆர்வம் , நோயாளி போல காட்சி தருதல், பேச்சு திறன் , செயல் திறன் , வழக்காடுதலில் வெற்றி, மெல்லிய உடல்  ஆகியவை மகர ராசி அன்பர்களுக்கு பொருந்தும் !!

சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் , 3,  12 க்கு அதிபதியான குரு பகவான் , ஒன்பதாமிடம் மாறுவது மிகவும் சிறப்பான காலகட்டம் ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஒரு பழமொழி ! எல்லா விதமான சுப காரியங்களும் தங்கு தடையின்றி நடக்கும் காலம் இது ! ராசி அதிபதி சனியும் 11 ம் வீட்டில் இருப்பதால் , மகிழ்ச்சி, திருப்தி , சந்தோடம் , சந்தான பாக்கியம் , திருமணம் , கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் , வழக்கு , போன்ற எல்லா காரியங்களும் வெற்றியாக கூடிய கால கட்டம் !! தசை புத்தியும் சிறப்பாக இருந்தால் , மிக பெரிய செல்வாக்கு பெற்று , மிக உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் !


குரு உங்கள் ராசியையும் , 3, 5 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , மேலும் சனியும் நல்ல நிலையில் இருப்பதால் , இதை போன்ற ஒரு சிறப்பான ஆண்டு மீண்டும் உங்களுக்கு கிடைக்க போவது இல்லை! மொத்த வாழ்நாளில் இந்த ஆண்டு சில பேருக்கு மட்டும் மறக்க முடியாத ஆண்டாக அமையும் !

அடுத்தது 7.5 சனி ஆரம்பிக்க உள்ளதால் , இந்த பொன்னான காலத்தை உபயோகித்து கொள்ளுமாறு உங்களுக்கு ஆலோசனை வழங்க படுகிறது !!










5 comments:

  1. Nandri Aiya.Ennaku job conform agama thali pogudhu.Nerandara Vela eppo amayum Aiya. Endha year veedu manai vangum yogam erukkungala? Enoda details 05 February 1989 eravu 9:30pm. Thiruvonam.

    ReplyDelete
  2. Nandri Aiya.Ennaku job conform agama thali pogudhu.Nerandara Vela eppo amayum Aiya. Endha year veedu manai vangum yogam erukkungala? Enoda details 05 February 1989 eravu 9:30pm. Thiruvonam.

    ReplyDelete
    Replies
    1. எங்கே பிறந்தீர்கள் என்ற விவரத்தை சேர்த்து கொடுங்கள் !

      நீங்கள் கொடுத்த தகவல் படி , கன்னி லக்கினம் , மகர ராசி , திருவோண நட்சத்திரம். லக்கின தையும், லக்கினாதிபதி யையும் , சந்திர சூரியர்களையும் , வலிமை பெற்ற குரு பார்த்த , அமாவாசையில் பிறந்த யோக ஜாதகம். மேலும், 9, 10, 11 கிரகங்கள் இணைந்தது தர்ம கர்மாதிபதி யோகம் ! அதே கிரஹங்கள், நவாம்சத்திலும் வலிமையாக இருப்பது மிக சிறப்பு !

      நடக்கும் தசை புத்தியும் , குரு பெயர்ச்சியும் சிறப்பாக உள்ளதால் நல்ல வேலை கிடைக்கும் ! ஆனால் அதே சமயம் , 7.5 சனி அடுத்த வருடம் ஆரம்பம் ஆவதால் மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது உங்களுக்கு நல்லது ! மிக சிறந்த அறிவாளி ஆன நீங்கள் மற்றவர்களிடம் அடங்கி போவது கடினம் தான் என்றாலும் , கெட்ட நேரங்களில் விட்டு கொடுத்து போவது நல்லது !

      சந்திரனுக்கு நான்கில் செவ்வாய் இருப்பதால் , நிறைய மனைகள் வாங்க கூடிய யோகமும் உண்டு !



      Delete
  3. Nandri Aiya. Jodhida thagavalgalai thodarndhu post pannunga Aiya.

    ReplyDelete
  4. Nandri Aiya. Jodhida thagavalgalai thodarndhu post pannunga Aiya.

    ReplyDelete