copyprotect
Thursday, July 28, 2016
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - விருச்சிகம் ராசி / Scorpio Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
குழப்பம் , எரிச்சல் , நேர்மை , பிடிவாதம் , கொந்தளிப்பான மன நிலை ,
ஆளுமை , சரியான நேரத்தில் கொடுத்த வேலையே முடித்தல் , வாக்கு பலிதம் , பழி வாங்கும் எண்ணம் , கடும் கோபம், மற்றவர்களை புரிந்து கொள்ளாமல் எளிதாக புண்படுத்துவது காயப்படுத்துவது, தன்னை தானே காயப்படுத்தி கொள்வது , ஆகிய குணங்களை உடைய விருச்சிக ராசி நேயர்களே ! ஞானிகளால் உங்களுக்கு கொடுக்க பட்டு இருக்கும் சின்னம் தேள் ஏ இதற்க்கு சாட்சி !
சனி விருச்சிக ராசியில் இருப்பதால் , இப்பொழுது விருச்சிக ராசியில் பிறக்கும் குழந்தைகளுக்கு , சனி சந்திரன் இருவரும் சேர்ந்து இருப்பார்கள் ! அப்படி இருக்கையில் , மேலே நான் சொன்ன குணங்கள் , 100% ஒத்து போகும் !
ஜென்ம சனியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் உங்களுக்கு , இந்த குரு பெயர்ச்சி நிச்சயம் ஆறுதல் அளிக்க கூடியது !
செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற ராசியாகி, குரு பகவான் 2, 5 க்கு அதிபதியாகி , இப்பொழுது பதினொன்றில் வருகிறர் ! இதுநாள் வரை தடை பட்டு இருந்த குழந்தை பாக்கியம் , திருமணம் போன்ற சுப காரியங்கள் நிச்சயம் நடக்கும் ! கல்வி , தொழில் , வேலை , எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பதை நீங்கள் 100% நம்பலாம் ! அதே நேரத்தில் , ஜென்ம சனியும் , கூடிய சீக்கிரமே விலக போவதால் , இனி குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும் !
குரு உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய ராசிகளை பார்ப்பதால் இளைய சகோதரம் , பிள்ளைகள் , கணவன் / மனைவி வழியில் நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம் ! வெளிநாடு யோகம் சில பேருக்கு கிடைக்கும் ! தசை, புத்தி சிறப்பாக இல்லையென்றால் , ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !
உங்களை பொறுத்தவரை , கோயிலுக்கு போவதை விட , த்யானம், யோகா , போன்ற மனதை அமைதியாக , ஒரு நிலை படுத்துவதே சிறந்த பரிகாரம் ! மௌன விரதம் நிச்சயம் உதவி செய்யும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment