copyprotect
Thursday, July 28, 2016
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மீனராசி / Pisces Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
மெழுகுவத்தி தன்னை உருக்கி அடுத்தவர்களுக்கு வெளிச்சம் தருவது போல் , அடுத்தவர் நலனை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும்(Sacrifice) மீன ராசி நேயர்களே ! கால புருஷ தத்துவத்திற்கு 12 வது ராசி மீன ராசி என்பதால் இந்த நிலை ! 12 ராசிகளிலேயே, அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத ராசி , ரெண்டே ராசி ! ஒன்று தனுசு, இன்னொன்று மீனம் ! இரண்டுக்குமே குரு பகவான் தான் அதிபதி !
மேலும் , ஒரு ஜாதகத்தில் இருக்கும் அனைத்து விதமான யோகங்களும் குருவையும் சந்திரனையும் மையமாக வைத்தே எழுத பட்டு உள்ளது ! ஆட்சி , உச்சம் பெற்ற வளர்பிறை சந்திரன் , சூரியனின் நேரடி பார்வையில் (பௌர்ணமி), இருப்பது , குருவிற்கு நிகரான முழு சுப கிரகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன ! குரு பகவானை பொன்னவன், மன்னவன் , பிரகஸ்பதி என்று ஜோதிட நூல்கள் புகழ்வதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது புரிந்து இருக்குமே !
உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் , இது நாள் வரை உடல் நிலையில் தாங்க முடியாத துயரத்தை கொடுத்த குரு , இப்பொழுது ஏழாமிடத்திற்கு வருவது மிகவும் சிறப்பான கால கட்டம் ! நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இப்பொழுது கண்டிப்பாக திருமணம் நடை பெரும் ! எல்லா வகையிலும் உயர்வான நிலையை நீங்கள் எதிர்பார்க்கலாம் !
குரு உங்கள் ராசிக்கு 11, 1, 3 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , லாபம் , மன தெளிவு , தோற்ற பொலிவு , இளைய சகோதரம் , குழந்தை பாக்கியம் , திருமணம் , வெளிநாடு வாய்ப்பு , கல்வி , வேலை வாய்ப்பு , பதவி உயர்வு , நல்ல இட மாற்றம் , போன்ற அனைத்து விதமான நற்பலன்களும் எதிர் பார்க்கலாம் ! தசை புத்தி நன்றாக இருந்தால் , துணிந்து பல முயற்சிகளை எடுத்து வெற்றி பெறலாம் !
ஆலங்குடி , திட்டை போன்ற திருத்தலங்கள் சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு ! குல தெய்வ கோவிலுக்கு வருடத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள் ! கோவில் மேம்பாட்டுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - கும்ப ராசி / Aquarius Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
நல்ல இதயம் , வேலை சூட்சமம் , பிறருக்கு கெடுதல் நினைக்காத உள்ளம் , பேச்சு திறன் ஆகிய குணங்கள் கும்ப ராசி அன்பர்களுக்கு பொருந்தும் !
சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் , 2, 11 க்கு அதிபதியான குரு பகவான் , எட்டமிடான அஷ்டம குருவாக மாறுவது அவ்வளவு சிறப்பான நேரம் கிடையாது ! பண தட்டுப்பாடு ஏற்படும் , செய்யும் தொழில் , வேலையில் கவனம் தேவை ! சுப காரியங்கள் செய்ய / நடக்க தடை உண்டு !
குரு உங்கள் ராசிக்கு 12, 2, 4 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , ஓரளவு நற்பலன்கள் எதிர்பார்க்கலாம் ! பொதுவாக , அலைச்சல் , உடல் நலம் கெடுதல் , நிம்மதி குறைவு , தோல்விகள் , அவமானங்கள் நீங்கள் சந்திக்கலாம் ! குரு , சனி , ராகு , கேது பெயர்ச்சிக்கு எதுவுமே சரியில்லை என்பதால் கவனம் தேவை !
ஒரு வருடம் மட்டும் நீங்கள் பொறுத்து கொண்டால் , அடுத்து வரும் குரு பெயர்ச்சியும், சனி பெயர்ச்சியும் உங்களை புகழ் , செல்வாக்கின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் (ஜாதக வலிமையை பொறுத்து மாறுபடும் ). வாழ்த்துக்கள் !!
ஆலங்குடி , திட்டை போன்ற திருத்தலங்கள் சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு ! முடியாதவர்கள் , வியாழன் விரதம் , அருகில் உள்ள கோவிலுக்கு செல்லுதல் , வீட்டிலேயே தினமும் வழிபடுவதால் சிறிது ஆறுதல் அடையலாம் ! குல தெய்வ கோவிலுக்கு வருடத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள் ! கோவில் மேம்பாட்டுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மகர ராசி / Capricorn Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
புத்திசாலித்தனம் , எதையும் எளிதாக கிரகித்து கொள்ளுதல், தலைமை பண்பு , தலைக்கனம் , சிறிது கஞ்சத்தனம் , Practical Mind, Organized, அதீதமான கலை ஆர்வம் , நோயாளி போல காட்சி தருதல், பேச்சு திறன் , செயல் திறன் , வழக்காடுதலில் வெற்றி, மெல்லிய உடல் ஆகியவை மகர ராசி அன்பர்களுக்கு பொருந்தும் !!
சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் , 3, 12 க்கு அதிபதியான குரு பகவான் , ஒன்பதாமிடம் மாறுவது மிகவும் சிறப்பான காலகட்டம் ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஒரு பழமொழி ! எல்லா விதமான சுப காரியங்களும் தங்கு தடையின்றி நடக்கும் காலம் இது ! ராசி அதிபதி சனியும் 11 ம் வீட்டில் இருப்பதால் , மகிழ்ச்சி, திருப்தி , சந்தோடம் , சந்தான பாக்கியம் , திருமணம் , கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் , வழக்கு , போன்ற எல்லா காரியங்களும் வெற்றியாக கூடிய கால கட்டம் !! தசை புத்தியும் சிறப்பாக இருந்தால் , மிக பெரிய செல்வாக்கு பெற்று , மிக உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் !
குரு உங்கள் ராசியையும் , 3, 5 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , மேலும் சனியும் நல்ல நிலையில் இருப்பதால் , இதை போன்ற ஒரு சிறப்பான ஆண்டு மீண்டும் உங்களுக்கு கிடைக்க போவது இல்லை! மொத்த வாழ்நாளில் இந்த ஆண்டு சில பேருக்கு மட்டும் மறக்க முடியாத ஆண்டாக அமையும் !
அடுத்தது 7.5 சனி ஆரம்பிக்க உள்ளதால் , இந்த பொன்னான காலத்தை உபயோகித்து கொள்ளுமாறு உங்களுக்கு ஆலோசனை வழங்க படுகிறது !!
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - தனுசு ராசி / Sagittarius sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
மற்றவர்களுக்கு தீங்கு இளைக்காத நல்ல உள்ளம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ! நெருப்பு ராசியாக இருந்தாலும் , அமைதி , சாந்தம் , நல்ல எண்ணம் , ஆன்மீக ஈடுபாடு நிச்சயம் உங்களிடம் உண்டு ! காலா புருஷ தத்துவத்துக்கு 9வது ராசி என்பதால் , தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி தர வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கும் ! வெள்ளை உள்ளம் கொண்டவர் என்பதால் , மற்றவர்கள் எளிதாக இவர்களை ஏமாற்றி விடுவர் ! விழிப்போடு இருப்பது நல்லது !
ராசி அதிபதியும் , 4ம் இடத்துக்கு அதிபதியான குரு பகவான் , பத்தாமிடம் மாறுவது சிறப்பாகாது ! வேலை , தொழிலில் கவனம் தேவை ! இருந்தாலும் , ராசி அதிபதி என்பதால் பெரிய கெடுதல் ஏற்பட வாய்ப்பு இல்லை ! ஆனால் , அந்த கெடுதல் சனியின் வழியே வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது ! இத்தனைக்கும் , சனி க்கு குரு பார்வை இல்லை ! பொருள் விரயம் கடுமையானதாக கடந்த 2 வருடங்கள் இருந்திருக்கும் ! எதுவும் சேமித்து இருக்க முடியாது !
குரு உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய ராசிகளை பார்ப்பதால் ஓரளவு நன்மை மட்டுமே எதிர்பார்க்கலாம் ! தசை, புத்தி சிறப்பாக இல்லையென்றால் ,
ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - விருச்சிகம் ராசி / Scorpio Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
குழப்பம் , எரிச்சல் , நேர்மை , பிடிவாதம் , கொந்தளிப்பான மன நிலை ,
ஆளுமை , சரியான நேரத்தில் கொடுத்த வேலையே முடித்தல் , வாக்கு பலிதம் , பழி வாங்கும் எண்ணம் , கடும் கோபம், மற்றவர்களை புரிந்து கொள்ளாமல் எளிதாக புண்படுத்துவது காயப்படுத்துவது, தன்னை தானே காயப்படுத்தி கொள்வது , ஆகிய குணங்களை உடைய விருச்சிக ராசி நேயர்களே ! ஞானிகளால் உங்களுக்கு கொடுக்க பட்டு இருக்கும் சின்னம் தேள் ஏ இதற்க்கு சாட்சி !
சனி விருச்சிக ராசியில் இருப்பதால் , இப்பொழுது விருச்சிக ராசியில் பிறக்கும் குழந்தைகளுக்கு , சனி சந்திரன் இருவரும் சேர்ந்து இருப்பார்கள் ! அப்படி இருக்கையில் , மேலே நான் சொன்ன குணங்கள் , 100% ஒத்து போகும் !
ஜென்ம சனியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் உங்களுக்கு , இந்த குரு பெயர்ச்சி நிச்சயம் ஆறுதல் அளிக்க கூடியது !
செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற ராசியாகி, குரு பகவான் 2, 5 க்கு அதிபதியாகி , இப்பொழுது பதினொன்றில் வருகிறர் ! இதுநாள் வரை தடை பட்டு இருந்த குழந்தை பாக்கியம் , திருமணம் போன்ற சுப காரியங்கள் நிச்சயம் நடக்கும் ! கல்வி , தொழில் , வேலை , எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பதை நீங்கள் 100% நம்பலாம் ! அதே நேரத்தில் , ஜென்ம சனியும் , கூடிய சீக்கிரமே விலக போவதால் , இனி குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும் !
குரு உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய ராசிகளை பார்ப்பதால் இளைய சகோதரம் , பிள்ளைகள் , கணவன் / மனைவி வழியில் நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம் ! வெளிநாடு யோகம் சில பேருக்கு கிடைக்கும் ! தசை, புத்தி சிறப்பாக இல்லையென்றால் , ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !
உங்களை பொறுத்தவரை , கோயிலுக்கு போவதை விட , த்யானம், யோகா , போன்ற மனதை அமைதியாக , ஒரு நிலை படுத்துவதே சிறந்த பரிகாரம் ! மௌன விரதம் நிச்சயம் உதவி செய்யும்!
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - துலாம் ராசி / Libra Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
நேர்மை, பொறுமை , கலை ஆர்வம் , கடின உழைப்பு , தலைமை பண்பு கொண்ட துலாம் ராசி நேயர்களே ! உங்களக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சின்னம் தராசு ! நேர்மைக்கு பெயர் போன நிறைய நீதிபதிகளை கொண்ட ராசி உங்கள் ராசி ! நீதி பரி பாலனம் செய்யும் சனி பகவான் துலாம் ராசியில் உச்சம் அடைவதன் ரகசியம் இது தான் !
சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ராசியாகி, குரு பகவான் 3, 6 க்கு அதிபதியாகி , இப்பொழுது பனிரெண்டில் மறைவது ஒரு விதத்தில் நல்லது தான் ! கெடுதல் ஏற்படாது என்றாலும் , அதே சமயத்தில் , பெரிய நன்மைகள் எதுவும் எதிர் பார்க்க முடியாது ! சுப செலவுகள் , நல்ல தூக்கம், குழந்தை பேறு தடை , திருமண தடை ஆகியவை எதிர்பார்க்கலாம் !! அதே சமயத்தில் , எதிரிகள் பிரச்சனை இனி இருக்காது ! 7.5 சனி தொடர்வதால் பொருள் விரயம் , குடும்பத்தில் பிரச்சனை , மன கவலை இருக்க தான் செய்யும்!
குரு உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய ராசிகளை பார்ப்பதால் ஓரளவு நன்மைகள் எதிர்பார்க்கலாம் !
ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - கன்னிராசி / Virgo sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
ஆராய்ச்சி செய்யும் குணம் , மனம் சொல்வதை விட புத்தி சொல்வதை கேட்கும் குணம் படைத்த , அழகான , சாந்தமான தோற்றம் உடைய கன்னி ராசி நேயர்களே !
ராசிக்கு 4, 7 க்கு அதிபதியாகி , பாதகாதிபதி குரு , ராசிக்குள்ளே வருவது , அவ்வளவு சிறப்பான பெயர்ச்சி கிடையாது ! மன கவலை இருக்க தான் செய்யும்! அதே நேரத்தில் , யோகாதிபதியான சனி பகவான் நல்ல நிலையில் இருப்பதால் எந்த பெரிய பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை !
குரு உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய ராசிகளை பார்ப்பதால் குழந்தை பாக்கியம், குழந்தைகள் கல்வி , வேலை மேம்படுத்தல் , திருமணம் , கணவன் மனைவி இடையே ஒற்றுமை , பாக்கியம் , வெளிநாடு யோகம் கிடைக்கும் !!
ஆலங்குடி , திட்டை சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு !
Subscribe to:
Posts (Atom)