Thursday, July 28, 2016
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மகர ராசி / Capricorn Sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
புத்திசாலித்தனம் , எதையும் எளிதாக கிரகித்து கொள்ளுதல், தலைமை பண்பு , தலைக்கனம் , சிறிது கஞ்சத்தனம் , Practical Mind, Organized, அதீதமான கலை ஆர்வம் , நோயாளி போல காட்சி தருதல், பேச்சு திறன் , செயல் திறன் , வழக்காடுதலில் வெற்றி, மெல்லிய உடல் ஆகியவை மகர ராசி அன்பர்களுக்கு பொருந்தும் !!
சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் , 3, 12 க்கு அதிபதியான குரு பகவான் , ஒன்பதாமிடம் மாறுவது மிகவும் சிறப்பான காலகட்டம் ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஒரு பழமொழி ! எல்லா விதமான சுப காரியங்களும் தங்கு தடையின்றி நடக்கும் காலம் இது ! ராசி அதிபதி சனியும் 11 ம் வீட்டில் இருப்பதால் , மகிழ்ச்சி, திருப்தி , சந்தோடம் , சந்தான பாக்கியம் , திருமணம் , கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் , வழக்கு , போன்ற எல்லா காரியங்களும் வெற்றியாக கூடிய கால கட்டம் !! தசை புத்தியும் சிறப்பாக இருந்தால் , மிக பெரிய செல்வாக்கு பெற்று , மிக உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் !
குரு உங்கள் ராசியையும் , 3, 5 ஆகிய ராசிகளை பார்ப்பதால் , மேலும் சனியும் நல்ல நிலையில் இருப்பதால் , இதை போன்ற ஒரு சிறப்பான ஆண்டு மீண்டும் உங்களுக்கு கிடைக்க போவது இல்லை! மொத்த வாழ்நாளில் இந்த ஆண்டு சில பேருக்கு மட்டும் மறக்க முடியாத ஆண்டாக அமையும் !
அடுத்தது 7.5 சனி ஆரம்பிக்க உள்ளதால் , இந்த பொன்னான காலத்தை உபயோகித்து கொள்ளுமாறு உங்களுக்கு ஆலோசனை வழங்க படுகிறது !!
Nandri Aiya.Ennaku job conform agama thali pogudhu.Nerandara Vela eppo amayum Aiya. Endha year veedu manai vangum yogam erukkungala? Enoda details 05 February 1989 eravu 9:30pm. Thiruvonam.
ReplyDeleteNandri Aiya.Ennaku job conform agama thali pogudhu.Nerandara Vela eppo amayum Aiya. Endha year veedu manai vangum yogam erukkungala? Enoda details 05 February 1989 eravu 9:30pm. Thiruvonam.
ReplyDeleteஎங்கே பிறந்தீர்கள் என்ற விவரத்தை சேர்த்து கொடுங்கள் !
Deleteநீங்கள் கொடுத்த தகவல் படி , கன்னி லக்கினம் , மகர ராசி , திருவோண நட்சத்திரம். லக்கின தையும், லக்கினாதிபதி யையும் , சந்திர சூரியர்களையும் , வலிமை பெற்ற குரு பார்த்த , அமாவாசையில் பிறந்த யோக ஜாதகம். மேலும், 9, 10, 11 கிரகங்கள் இணைந்தது தர்ம கர்மாதிபதி யோகம் ! அதே கிரஹங்கள், நவாம்சத்திலும் வலிமையாக இருப்பது மிக சிறப்பு !
நடக்கும் தசை புத்தியும் , குரு பெயர்ச்சியும் சிறப்பாக உள்ளதால் நல்ல வேலை கிடைக்கும் ! ஆனால் அதே சமயம் , 7.5 சனி அடுத்த வருடம் ஆரம்பம் ஆவதால் மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது உங்களுக்கு நல்லது ! மிக சிறந்த அறிவாளி ஆன நீங்கள் மற்றவர்களிடம் அடங்கி போவது கடினம் தான் என்றாலும் , கெட்ட நேரங்களில் விட்டு கொடுத்து போவது நல்லது !
சந்திரனுக்கு நான்கில் செவ்வாய் இருப்பதால் , நிறைய மனைகள் வாங்க கூடிய யோகமும் உண்டு !
Nandri Aiya. Jodhida thagavalgalai thodarndhu post pannunga Aiya.
ReplyDeleteNandri Aiya. Jodhida thagavalgalai thodarndhu post pannunga Aiya.
ReplyDelete